தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Friday 12 August 2016

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்

என்எல்சியில் 12 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நிர்வாகத்துடன் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்றத் தின் உத்தரவுப்படியும் எவ்வித நிபந்தனையின்றி இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும். ‘அவுட் சோர்ஸிங்' முறையில் வேலைகளை செய்வதை கைவிட வேண்டும், ‘இன்கோ-சர்வ்' பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழி லாளர் சங்க நிர்வாகிகளை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என் பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைவர் உக்கிரவேல் மற்றும் செயலாளர் வெங்கடேசன் நேற்று என்எல்சி மனித வளத்துறை பொது மேலாளர் தியாகராஜனிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.
இது தொடர்பாக வெங்கடேசன் கூறும்போது, “வேலை நிறுத்தம் தொடங்க செப். 2-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் வேலைநிறுத் தத்தில் ஈடுபடுவோம்” என்றார்.