தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Monday 5 December 2016

இதய அஞ்சலி

   



வாழ்க்கையே போராட்டமாகவும் சாதனையாகவும் நிகழ்த்திக் 

காட்டிய தமிழக முதல்வர் ஜெயலலிதா 
அம்மையார் அவர்களின் மறைவுக்கு 

நமது ஆழ்ந்த இரங்கல்கள்   

Friday 25 November 2016

    குடந்தை  மாவட்ட  NFTE-TMTCLU 
சம்மேளன நாள்  கொடி  ஏற்றுதலின்  தொகுப்பு 














Monday 21 November 2016

தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
மாவட்ட சங்கம். கடலூர்.

மாவட்ட செயற்குழு

            20-11-2016 அன்று  நமது NFTE  மாவட்ட சங்க அலுவலகத்தில் TMTCLU சங்கத்தின் மாவட்ட செயற்குழு காலை 10.00 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர் M.S.குமார் அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டது. தோழர் R.மர்வேந்தன் கிளைச் செயலர்-NFTE,NKM வரவேற்புரை நிகழ்த்தினார். துவக்கவுரையாக நமது மாவட்ட செயலர் தோழர் G, ரங்கராஜ் உரையாற்றினார். தோழர்கள் மணிகண்டன்,  பாலகணபதி, அண்ணாதுரை,கிருஷ்ணகுமார்,சுரேஷ்,உதயசூரியன், சக்திவேல், பிரபு, பாலமுருகன் மற்றும் பல தோழர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். NFTE யின் மாநில துணைத் தலைவர் V.லோகநாதன் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன், NFTE மாவட்டச் உதவி செயலர்கள் தோழர் D.குழந்தைநாதன்,  D.ரவிச்சந்திரன் மற்றும் A.S குருபிரசாத் அவர்களும், NFTE  முண்னனி தோழர்கள் S.ரவி SS,  R.நந்தகுமார் JE, GM அலுவலக கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன் , மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் சு.தமிழ்மணி மாநில இனைப் பொதுச் செயலர் அவர்களும், தோழர் இரா.ஸ்ரீதர் மாவட்ட செயலர் NFTE அவர்களும் சிறப்புரைற்றினார்கள். நிறைவுறையாக நமது பொதுச் செயலர் தோழர் R. செல்வம் உறையாற்றினார்.

        இறுதியாக தோழர் சுரேஷ் அவர்கள் நன்றியுரை கூறினார்.

        இனிய தேனீர் வழங்கிய P.வீரமணி, NFTE கிளைச் செயலர் தோழர் S.ராஜேந்திரன் அவர்களுக்கும் மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்த நமது பாசமிகு மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் அவர்களுக்கும்  மாவட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை உரித்தாக்குகிறோம்.

                  மாவட்ட செயற்குழுவில் கலந்து கொண்டவர்கள் 



மாவட்ட செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்

  • 1.    சம வேலைக்கு சம ஊதியமும்  – உச்ச நீதிமன்ற தீர்ப்பும் மா நிலந்தழுவிய கருத்தரங்கத்தை கடலூரில்  டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடத்துவது.

  • 2.    2015-16 ஆண்டிற்க்கான விடுபட்ட போனஸ் வழங்கிட வேண்டும். மற்றும் புதிய டெண்டரில் 8.33 போனஸ் அல்லது ரூ 7000/- குறிப்பிட வேண்டும்.
  • 3. ஒப்பந்தகாரர் மாறினாலும் ஒப்பந்த ஊழியர்களின் பணிக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்
  • 4.    BSNL விடுமுறை நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.
  • 5.    செக்யூரிட்டி பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
  • 6.    அடையாள அட்டையில் மாவட்ட நிர்வாகம், ஒப்பந்தகாரர் இருவரும் கையெழுத்திட்டு அனைத்து தொழிலாளர்களுக்கு  வழங்க வேண்டும்.
  • 7.    25-10-2016-ல் மாநில  நிர்வாகம் வெளியிட்ட உத்திரவை கறாராக அமுலபடுத்திட வேண்டும்.
  • 8.  மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை உடணடியாக வழங்க வேண்டும்.
  • 9.    A/C பிளாண்ட் பணியினை செய்யும் தோழர்களை HOUSE KEEPING  TENDER-ல் சேர்த்திட வேண்டும்.
  • 10  நமது மாவட்டத்தில்  இறந்து போன இரண்டு ஒப்பந்த ஊழியர்களின் குடும்பத்தாருக்கு  நிதியுதவியாக ரூ 100/- கொடுத்திட வேண்டும்.

தோழமையுடன்
 G.ரங்கராஜ்
  மாவட்ட செயலர்-TMTCLU

Tuesday 8 November 2016

சம வேலைக்கு சம ஊதியம்

    நிரந்தரப் பணியாளர்களுக்குச் சமமான சம்பளத்தை ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் தர வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம். நல்ல தீர்ப்பு இது. தினக் கூலிகளாகவும் தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்ளுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் கிடைப்பதில்லை. ‘அதிகாரத்தால் அடிமைப்படுத்திச் சுரண்டுகிற செயல்’ இது என்கிறது நீதிமன்றம்.
சம வேலைக்குச் சம ஊதியம் என்பது ஒரு கோட்பாடு. அதை நிறைவேற்ற மறுப்பது, மனித கண்ணியத்தைக் குலைக்கும் செயல் என்று விமர்சித்துள்ளது நீதிமன்றம். அரசாங்கத் தின் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பற்றித்தான் இந்தத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. அரசுத் துறையும் தனியார் துறையும் நிரந்தரத் தொழிலாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் இரண்டு அடுக்கு சாதிகளைப் போலப் பிரித்து வைத்திருக்கின்றன. இந்த ஏற்றத்தாழ்வான நிர்ணயிப்புகளைத்தான் இந்தத் தீர்ப்பு விமர்சிக்கிறது.
அமலாகுமா தீர்ப்பு?
நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் ஒரு சிறுபகுதியினர்தான் நிரந்தரத் தொழிலா ளர்கள். அவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகச் சம்பளமும் உத்தரவாதமான வேலையும் கிடைத்துள்ளன. ஆனால், மிகப்பெருமளவிலான தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். எந்தக் காரணமும் சொல்லாமல் எந்த நேரமும் வேலையை விட்டு நீக்கக்கூடிய நிலையில் அவர்கள் உள்ளனர். நிரந்தரத் தொழிலாளர்கள் பெறுகிற சம்பளத்தைவிட மிகவும் குறைவான சம்பளத்தையே இவர்கள் பெறுகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான நஷ்ட ஈட்டை உடனடியாகக் கிடைக்கச் செய்யும் என்று நாம் இயல்பாக எதிர்பார்ப்போம். இது நடக்காது என்பதுதான் துரதிர்ஷ்டம். நிர்வாகத் தோடு பேரம் பேசி, தங்களுக்கானதைச் சாதித்துக்கொள்கிற நிரந்தரத் தொழிலாளர்களைப் போலக் கிடையாது ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலைமை. இருவருக்குமான வேறுபாடு இதுதான்.
சங்கத்தில் சேரும் தகுதி
ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிற ஒருவர், அதன் தொழிற்சங்கத்தில் சேரலாம் என்கிறது தொழிற்சங்கங்களுக்கான சட்டம் - 1926. ஆனால், நடைமுறையில் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்கங்களில் உள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆலை உரிமையாளரின் பணியாளர்கள் அல்ல. எனவே, உரிமையாளரோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தொழிற் சங்கத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டிய தில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது.
தொழிற்சாலை சம்பளப் பட்டியலில் ஒருவர் பெயர் இல்லை என்பதால், அவர் தொழிற்சங்கத் தில் சேர்வதற்கான தகுதியை இழந்துவிடுவ தில்லை. “தொழிற்சங்கத்தோடு தொழில்தகராறு எழுந்துள்ள ஆலை உரிமையாளரால் பணி நிய மனம் வழங்கப்பட்டிருந்தாலும் இல்லையென் றாலும், தொழில் அல்லது வணிகத்தில் பணியாற்று கிற அனைவரும் தொழிலாளர்கள்தான்” என்கிறது தொழிற்சங்கச் சட்டத்தின் பிரிவு 2 (ஜி) என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். தொழிற்சங்கத்தில் யாரெல்லாம் உறுப்பினராகலாம் என்ற கேள்வி சமீபத்தில் சன்பீம் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்துக்கு எதிராக சந்தர் பான் என்பவர் ஹரியாணா மாநிலத்தின் குர்கான் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எழுந்தது. ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிற ஒருவர், சட்டம் நிர்ணயித்துள்ள வரையறைகளுக்குப் பொருந்தினால் அவர் தொழிற்சங்க நடவடிக்கை களில் பங்கேற்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குர்கான் தொழிற்பகுதியில் சன்பீம் சங்கம் மட்டும்தான் 240 நாட்கள் பணி செய்தவர்களைச் சங்க உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்கிறது. நீதிமன்றத்தைத் தலையிட வைத்துதான் சங்கம் இந்த நிலைக்கு உயர்ந்தது. ஆனால், அந்தச் சங்கம்கூட ஒப்பந்தத் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்வதில்லை. நடைமுறையில், எந்த ஒரு தொழிற்சங்கமும் ஒப்பந்தத் தொழிலாளர் களைச் சேர்த்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு வாக்குரிமையும் அளிப்பதில்லை.
கசப்பான உண்மை
இதற்கான காரணங்கள் பல. எந்தவொரு சங்கச் செயல்பாட்டையும் பகைமையோடு பார்க்கிற சூழல் இருக்கிறது. அதனால், ஒப்பந்தத் தொழிலாளர் களையும் இணைத்துக்கொள்ளும் தொழிற் சங்கத்தை அமைத்தால் தொழிற்சாலை நிர்வாகம் மேலும் பகைமையோடு மாறும் என்று நம்பு கிறார்கள் தொழிலாளர்கள்.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் பற்றி தொழிற் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்த ஆலை நிர்வாகங்கள் மறுத்துவிடுகின்றன. நிரந்தரத் தொழிலாளர்களோடு ஒப்பிட்டால், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான வேலை உத்தரவாதம் மிகவும் குறைவு. சங்கத்தில் செயல்படுகிற நிரந்தரத் தொழிலாளர்களைக்கூட கம்பெனிகள் அடிக்கடி வேலையை விட்டு நீக்குகிற காலம் இது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான ஆபத்துகள் மிக அதிகம். அவர்கள் எந்த நேரமும் நிர்வாகங் களால் வேலைநீக்கம் செய்யப்படலாம்.
ஒப்பந்தத் தொழிலாளர்களை உறுப்பினர் களாகச் சேர்த்துக்கொள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்களில் உள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் விரும்புவதில்லை என்பது கசப்பான உண்மை. 300 நிரந்தரத் தொழிலா ளர்களும் 1,200 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றும் ஒரு ஆலையில், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்தவொரு சங்கமும் வாக்குரிமை தருமானால், உடனடியாக நிரந்தரத் தொழிலாளர்களைவிட ஒப்பந்தத் தொழிலாளர் கள் பெரும்பான்மை பெற்றுவிடுவார்கள்.
நிரந்தரத் தொழிலாளர்களுக்கு அதிகமான சம்பளம் தரப்படுவதால் அவர்களின் பொருளா தார நலன்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தொழிற்சங்கத்தில் சேர்ப்பதற்கு எதிராக உள்ளன. இதனால், உருக்கு, நிலக்கரி, போன்ற சில விதிவிலக்கான பொதுத் துறை நிறுவனங்களைத் தவிர்த்த, பெரும்பாலான நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்படுபவர் களாக, பெரும்பாலும் அவர்களுக்கான தொழிற் சங்கம் இல்லாதவர்களாக இந்தியாவில் உள்ளனர்.
சுரண்டலைக் காக்கும் சட்டம்
ஒப்பந்தமுறைத் தொழிலாளர்கள் முறை (ஒழுங்குபடுத்தல் மற்றும் ஒழிப்பு) சட்டம் - 1970 ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்க வந்த சட்டம்போலத் தோற்றம் அளித்தது. ஆனால், நடைமுறையில் ஒப்பந்ததாரர்களின் சுரண்டலைப் பாதுகாத்தது.
இந்தச் சட்டம் வருவதற்கு முன்பாக, நிரந்தரத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலா ளர்களும் ஒரே சங்கத்தில் இருந்தனர். உரிமை களை இணைந்து கோரினார்கள். ஆனால், வேலையளிப்பவர் என்ற நிலையை ரகங்களாகச் சட்டம் பிரித்தது. வேலையளிப்பவர், முதன்மை வேலையளிப்பவர் என்று ஆக்கியது. ஒப்பந்தத் தொழிலாளர் முறை பெரியளவில் அதிகரிக்கவே இது உதவியது. ஆரம்பத்தில் தோட்டம், துப்புரவுப் பணி, வீட்டுவேலை ஆகியவற்றில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை இருந்தது. விரைவில் அது உற்பத்தித் துறையிலும் அதிகரித்தது. தொழிலாளர்கள் எதிர்த்ததால், ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் வந்தது. அது உற்பத்தித் துறையில் நிரந்தரப் பணிகளாக உள்ள இடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையைப் புகுத்துவதைத் தடை செய்தது. ஆனால், ஒப்பந்ததாரர்கள் குறுக்குவழிகளைக் கண்டுபிடித்தனர். துப்புரவுப் பணிக்கு என்று ஆள் எடுப்பார்கள். அவர் ஆலைக்குள் வந்ததும் உற்பத்திப் பணி செய்வார். துப்புரவுப் பணிக்குப் பதிலாக உற்பத்திப் பணி செய்கிறார் என்று ஆவணங்களில் இருக்காது.
இந்தியத் தொழிலாளர் இயக்கத்தின் முன்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒரு பழைய கேள்வியை வைக்கிறது. இன்று ஒரு ஆலையிலும் நாளை வேறொரு ஆலையிலும் பணியாற்றக்கூடியவர்களாகவும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடியவர்களாகவும் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை எவ்வாறு சங்கங்களில் இணைப்பது என்ற கேள்விதான் அது. தொழிலாளர் இயக்கம் இதற்கான விடையைக் காணாதவரை சட்டங்களாலும் தீர்ப்புகளாலும் தொழிலாளர்களின் நிலையை மாற்ற முடியாது.
© ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: த.நீதிராஜன்

Sunday 30 October 2016

சம வேலைக்கு சம ஊதியம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக தற்காலிக ஊழியர்களுக்கும் சம்பளம்...



      சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறை அனைத்து பணி மற்றும் பணியாளர்களுக்குப் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பில் தினசரி ஊதியம், தற் காலிக பணியாளர், ஒப்பந்த ஊழி யர் ஆகியோருக்கு நிரந்தர பணி யாளர்களுக்கு அளிக்கப்படும் அதே அளவுக்கு ஊதியம் வழங்கப் பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
     சம வேலைக்கு சம ஊதியம் மறுக்கப்படுவதானது, அடிமைத் தனமாகக் கருதப்படும். அடக்கு முறை, அடக்கி ஆளுதல், சிறுமைப் படுத்தல் ஆகியவை போலத்தான் கருதப்படும். தொழிலாளர் நலன் விரும்பும் மாநிலங்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அனைத்து துறையிலும் கடைப் பிடிக்க வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.
        பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில தற்காலிக பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதிய மானது குறைந்தபட்ச ஊதிய விதி யைக் கூட பூர்த்தி செய்யவில்லை என வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மாநில அரசுக்கு சாதகமாக அம்மாநில நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தற்காலிக பணியாளர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர்.
          ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை அளிக்காம லிருக்க பல்வேறு செயற்கையான காரணங்கள் கூறப்படுவதாக தாங்கள் கருதுவதாக நீதிபதிகள் ஜே.எஸ்.காதர், எஸ்.ஏ. போப்டே ஆகியோரடங்கிய அமர்வு தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது. ஒரு பணிக்காக தேர்வு செய்யப் படும் ஊழியருக்கு அதே பணியைச் செய்யும் நிரந்தர பணியாளருக்கு அளிக்கப்படும் அளவுக்கு ஊதியம் வழங்கப்படும். இதில் மாற்று கருத்துகளுக்கு இடமிருக்க முடி யாது. வேலை நிறுத்தம் போராட்டங்கள் மேற்கொள்வதன் முக்கிய காரணமே தாங்கள் கவுரமிக்கவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்து வதற்காகத்தான் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
           குறைந்த ஊதியத்திற்காக யாருமே பணியாற்ற முன் வருவ தில்லை. ஆனால் அவ்விதம் நிர் பந்திக்கப்படுகின்றனர். அந்த குறைந்தபட்ச ஊதியத்தின் மூலம் தானும் தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளதுதான் நிதர்சனம். இதனாலேயே தங்களது சுயமரி யாதை மற்றும் சுய கவுரவத்தை இழந்து குறைந்த ஊதியத்தில் பணி புரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
           சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார உரிமை தொடர்பாக 1966-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதியில் இந்தியாவும் கையெழுத் திட்டுள்ளது. இதன் விதிமுறைகள் ஏப்ரல் 10, 1979 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

          சட்ட விதிகளில் பல்வேறு விளக் கங்கள் இருந்தாலும் இந்திய அரசி யலமைப்பு விதி 141-ல் சம வேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமே இல்லை. ஊழியர் நிரந் தரப் பணியாளரா அல்லது தற் காலிக பணியாளரா என்ற பேதம் கிடையாது. ஊதியம் அனை வருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                                                             நன்றி:- தி தமிழ் இந்து....

Friday 28 October 2016

அனைவருக்கும்   
இனிய  தீப  திருநாள்  நல்வாழ்த்துக்கள் 





Tuesday 25 October 2016

நமது கடித்தின் அடிப்படையில் இன்று 25.10.2016

குடந்தையில் 10.09.2016 அன்று TMTCLU மாநில செயற்குழுவில்  எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் TMTCLU  மற்றும் NFTE மாநில செயலாளர்கள்   நமது  CGM  அவர்களை 20.10.2016 அன்று சந்தித்து  கடிதம்  அளித்தனர்  

*  8 மணி நேர  வேலை மாநில முழுவது      
    அமுல் படுத்து வேண்டும்   

* Nodal  அதிகாரியை  மாவட்டதோறும் உடனடியாக      நியமிக்கவேண்டும்

*அடையாள அட்டை உடனடியாக  வழங்க  வேண்டும்

* ESI  அடையாள அட்டை உடனடியாக வழங்க    வேண்டும்

*EPI   பணம்  கட்டுவதை  உறுதிபடுத்தவேண்டுமென  கோரிக்கைகள்  அளிக்கபட்டது


நமது கடித்தின்  அடிப்படையில்  இன்று   25.10.2016 அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு  மாநில  நிர்வாகம்  கடிதம் அனுப்பிஉள்ளது      

Saturday 22 October 2016

10 பேர் இருந்தால் பிஎப் பிடித்தம் திட்டம் மறுபரிசீலனை

ஒரு நிறுவனத்தில் 20 பேர் இருந்தால் பிஎப் பிடிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதை 10 பேர் வேலை செய்தாலே பி.எப் பிடித்தம் செய்யும் வகையில் மாற்றும் பரிந்துரையை அமைச்சரவை நிராகரித்தது. இதுகுறித்து குறிப்பிட்ட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, இதுகுறித்து மீண்டும் பரிசீலனை செய்யப்படும். 
தொழிலாளர் பாதுகாப்பு மட்டுமின்றி, இதை அமல்படுத்தினால் சிறு நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பும் ஆராயப்படும். பங்குச்சந்தையில் கடந்த செப்டம்பர் 30 வரை பிஎப் பணம் 9,148 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 9.43% லாபம் கிடைத்துள்ளதுஎன்றார்

Principal employer BSNL

 ஒப்பந்த ஊழியரை .... வேலை  வாங்கும் 
Principal employer  BSNL நிறுவனமே ! 
அதற்கான  பொறுப்பான அதிகாரிகள் ... 
ஒப்பந்த ஊழியருக்கான அனனத்து  தொழிலாளர் நல  சட்ட  திட்டங்களும்  ஒப்பந்தகாரர்களால்   முறையாக  அமுல்  படுத்தபடுகிறதா ?  என்பதனை கண்காணிக்கும்  பொறுப்பு  நமக்கு மிக  அவசியம்  
என வலியுறுத்தும்  கடிதம் .....

சம்பளம் ...புதுசு

குடந்தை மாவட்டதில்  TMTCLU   மற்றும் NFTE    மாவட்ட சங்க தொடர்  முயற்சியால்  ஒப்பந்த  ஊழியருக்கு  போனஸ் 8.33 முறை படி ஒப்பந்த  ஊழியருக்கு  6.10.2016  அன்றும் கேபிள்  ஒப்பந்த ஊழியருக்கு 21.10.2016 அன்றும்  போனஸ்  மற்றும்   புதிய சம்பளம்  வழங்க  முறைபடுத்தியுள்ளோம்   என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்து கொள்கிறோம்  உத்தரவை அமல்படுத்த முனைப்புடன் செயல்பட்ட  குடந்தை  மாவட்ட  நிர்வாகத்திற்கு   நன்றி ...

                                                                                 மாவட்ட சங்கம்  - TMTCLU -குடந்தை       
குடந்தை மாவட்டதில்  TMTCLU   மற்றும் NFTE    மாவட்ட சங்க தொடர்  முயற்சியால்  ஒப்பந்த  ஊழியருக்கு  போனஸ் 8.33 முறை படி ஒப்பந்த  ஊழியருக்கு  6.10.2016  அன்றும் கேபிள்  ஒப்பந்த ஊழியருக்கு 21.10.2016 அன்றும்  போனஸ்  மற்றும்   புதிய சம்பளம்  வழங்க  முறைபடுத்தியுள்ளோம்   என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்து கொள்கிறோம்  இதை  ஆவணம் செய்த  மாவட்ட  நிர்வாகத்திருக்கும்   அதிகாரிகளுக்கும்  நன்றி ...

                                                                                      மாவட்ட சங்கம்  - TMTCLU -குடந்தை      

Friday 14 October 2016

ஒப்பந்த ஊழியர் செய்தி
(13-1௦-2௦16)

தோழர்களே !
     இன்று ( 13-1௦-2௦16) நமது NFTE மாவட்ட செயலர் தோழர் இரா. ஸ்ரீதர் ,TMTCLU பொதுச் செயலர் தோழர் R.செல்வம் ஆகியோர் நமது DGM(A) அவர்களை ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ் மற்றும் ஊதிய உயர்வு பற்றி பேசினார்கள். அதில் சுமூக தீர்வும் எட்டப்பட்டது.

  • கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு ரூ 285/- வீதம் உயர்த்தி அறிவித்துள்ளது. அந்த சம்பளத்தினை நாம் தரவேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிர்வாகமும் தருவதாக உறுதியளித்துள்ளது.  4-1௦-2௦16 முதல் நிலுவைத் தொகையினை வழங்குவதற்கும் சம்மதித்துள்ளது.
  • இந்த ஆண்டு போனஸ் ரூ 7௦௦௦/- ஒப்பந்த ஊழியருக்கு 21-1௦-2௦16 க்குள் வழங்குவதற்கு நிர்வகாத்தால் தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி

                                                                                         தோழமையுடன்                               
                                                                             NFTE-மாவட்டச் சங்கம்,கடலூர்
                                                              TMTCLU - மாவட்டச் சங்கம், கடலூர்.

Thursday 6 October 2016

பாராளுமன்றகுழு அங்கீகரித்த குறைந்தபட்ச சம்பளத்தை உறுதிசெய்திடவும் 
ஒப்பந்தக்காரர்க்கு CHEQUE /ONLINE PAYMENT மூலம் PAYMENT பட்டுவாடா செய்திடவும் வலியுறுத்தி BSNL உத்தரவு பிறப்பித்துள்ளது .
உத்தரவு காண 

Tuesday 4 October 2016

அநீதி களையப்பட்டது

கிருஷ்ணகிரியில் சுமார் 40 ஒப்பந்த ஊழியர் தோழர்கள் மாற்று சங்கத்திலிருந்து நமது TMTCLU சங்கத்தில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கு முன் முயற்சி செய்திட்ட தோழர் பாரதிதாசன் (ஒப்பந்த ஊழியர்-கிருஷ்ணகிரி) BSNLEU சங்கத்தின் துரோகத்தினால் பழிவாங்கப்பட்டு இரண்டு மாத காலம் பணியிலிருந்து நீக்கப்பட்டார். நமது NFTE-TMTCLU மாநில சங்கத்தின் முயற்சியினால் மீண்டும் அந்த தோழர் பணியமர்த்தப்பட்டார். அத்தோழருக்கு நமது வாழ்த்துக்கள். 


TMTCLU- செய்தி
NFTE-TMTCLU மாநில சங்கங்கள் இணைந்து ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து மாநில நிர்வாகத்துடன் 20-09-2016 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் நிர்வாகம் அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. ஆகவே தலமட்ட NFTE-TMTCLU சங்க மாவட்ட செயலர்கள் தலமட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய ஆவணங்களை மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிட வலியுறுத்திட வேண்டும். இது பற்றிய தகவல்களை உடனடியாக மாநில சங்கத்திற்கும் தெரிவித்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுள்ள
R.செல்வம்

மாநில பொதுச்செயலர்-TMTCLU

Wednesday 21 September 2016

கோரிக்கை விளக்க கூட்டம்

அன்பார்ந்த ...தோழர்களே ... TMTCLU வின் கவன ஈர்ப்பு ஆர்பாட்ட கோரிக்கைகள் குறித்து வரும் 30.9.2016 அன்று CGM முன்னிலையில் விவாதித்து ...தீர்வு கண்டிட தமிழ் மாநில நிர்வாகம் NFTE மாநில சங்கத்திடம் கேட்டு கொண்டதன் அடிப்படையில் 22.9.2016 அன்று நடைபெறவிருந்த TMTCLU வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் " கோரிக்கை விளக்க" கூட்டமாக நடத்திட NFTE TMTCLU மாநில சங்கம்  கேட்டுகொள்கிறது .நன்றி  தோழமையுடன் ....பொது செயலர் ...செல்வம் ...TMTCLU