தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday 1 December 2015

ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் 

தமிழகத்தில் தொடர்ந்து துயர் தரும் கனமழை போல..
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளும் தொடர்ந்து துயர் அளிக்கின்றன.
மாவட்டத்திற்கு மாவட்டம் கனமழையின் அளவு வேறுபடுவது போல் ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளும்...
மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன.
 
தலமட்டங்களில்   தொடர்ந்து...
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்  தொடர்பாக குரல் எழுப்பப்படுவதால் 
ஒப்பந்த ஊழியர்   பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்திட மாவட்ட நிர்வாகங்களை  தமிழ் மாநில நிர்வாகம் மீண்டும்  அறிவுறுத்தியுள்ளது.
 

  • ஒப்பந்தக்காரர்களின் பில்கள் உரிய தேதிக்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். அதன் மூலம் ஒப்பந்த ஊழியருக்கு குறித்த தேதியில் கூலி தரப்பட வேண்டும்.
  • அடையாள அட்டை உடனே வழங்கப்பட வேண்டும்.
  • EPF மற்றும் ESI நலத்திட்டங்களுக்காக  இலாக்கா வழங்கும் தொகை  ஊழியரின் கணக்கில் உரிய முறையில் செலுத்தப்படுகிறதா என மாவட்ட நிர்வாகங்கள்  கவனம் செலுத்த வேண்டும்.
  • E - PASSBOOK எனப்படும்  மின்னணு வைப்புநிதி சேமிப்பு புத்தகம் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
  • ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் TENDER CONDITIONS கட்டாயம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
என்று மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
 

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் மீது டெல்லி தலைமையகமும் தமிழக நிர்வாகமும் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் சொன்ன பின்னும் மாவட்டங்களில் வழக்கம் போல் தாமதம் நிலவுகிறது. இம்முறையாவது மாவட்ட நிர்வாகங்கள் சற்றே விழித்து ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் தீர்வில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே நமது கோரிக்கையும்... எதிர்பார்ப்பும்...

No comments:

Post a Comment