தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Friday 30 October 2015

ஏஐடியூசியின் 95வது அமைப்பு தினம் அக்டோபர் 31

 
கூலிகள் என்றே கூப்பிடப் பட்டோம்,
தொழிலாளிகள் என்று எம் தலையை நிமிர்த்தாய்!
குனிந்து குறுகியே பழக்கப்பட்டிருந்தோம்,
நிமிரடா என்று எம் உடலை நிமிர்த்தாய்!
உழைப்பவன் கேட்பது பிச்சையே அல்ல,
உரிமையைக் கேளென எம் நெஞ்சம் நிமிர்த்தாய்!
வறுமையும் தாழ்வும் அழுக்குமாய் வாழ்ந்தோம்,
மனதைக் கழுவி எம் வாழ்வை நிமிர்த்தாய்!
அப்பன் வேலையே மகனுக் கென்றார்,
தப்பெனெச் சொல்லி எம் சந்ததி நிமிர்த்தாய்!
எத்தனை தூக்குகள், கத்திக்குத்து, அரிவாள் வெட்டுகள்,
ரத்தச்சேற்றிலும் எமைக் காக்கவே துடித்தாய்!
தொண்ணூற்றைந்து ஆண்டுகளாக எமைத் தூக்கிப்பிடிப்பவளே!
நீ எம் தந்தைக்குத் தந்தை!
தாய்க்கெல்லாம் தாய்!
நீடூழி வாழி நீ!

Wednesday 28 October 2015

ஒப்பந்த ஊழியருக்கு அடையாள அட்டை , EPF  செலுத்தப்பட்ட அட்டை , மற்றும் ESI  வழங்கிட வலியுறுத்தி கார்ப்ரேட் அலுவலகம் மாநில நிர்வாகத்திற்கு கடிதம் வெளியிட்டுள்ளது .

Thursday 15 October 2015

ஆர்ப்பாட்டம் 

ஒப்பந்த ஊழியர்களுக்கு 
போனஸ் 
வழங்கக்கோரி 

சம்பளத்துடன் கூடிய 
வார ஓய்வை மீண்டும் 
வழங்கக்கோரி..

மாவட்ட ஆட்சியர் 
நிர்ணயித்த கூலி 
வழங்கக்கோரி 

NFTE - BSNLEU 
TMTCLU - TNTCWU 
இணைந்த ஆர்ப்பாட்டம் 

16/10/2015 - வெள்ளி - மாலை 5 மணி 
பொது மேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

தோழர்களே... வாரீர்... 
ஒப்பந்த ஊழியர்க்கு போனஸ் வழங்கிட மாநில நிர்வாகத்தால் 
2013 ல் வெளியிடப்பட்ட வழிகாட்டும் உத்தரவு


Monday 12 October 2015


டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க அனுமதி வழங்கப்படாது: 
அரசு அரசாணை வெளியீடு

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில். மீத்தேன் வாயு திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்ய, தமிழக அரசால் தனிக் குழு அமைக்கப்பட்டது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சுமார் 691 சதுர கி.மீ. பரப்பில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனம் உத்தேசித்த நிலக்கரிப் படுகை மீத்தேன் வாயு வெளிக்கொணர்தல், உற்பத்தி தொடர்பான திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்நீர் உட்புகுதல், வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் விளைவு, மாசற்ற எரிசக்தி வளங்களை மேம்படுத்துதலின் தேவை ஆகியவை குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரின் தலைமையின் கீழ், தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிடம் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.



இதன்படி, தொழில்நுட்ப வல்லுநர் குழு தனது அறிக்கையைப் பரிந்துரைகளுடன் அரசுக்கு அளித்தது. இதை அரசு கவனமாகப் பரிசீலித்தப் பிறகு, தொழில்நுட்ப வல்லுநர் பரிந்துரைகளை ஏற்று இத்திட்டத்துக்குத் தமிழக அரசால் எந்தவொரு அனுமதியும் வழங்கப்படாது என முடிவு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், காவிரிப் படுகைப் பகுதியில் நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயு வெளிக்கொணர்தல், உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இது தொடர்பாக எந்தவிதமான முயற்சியையும் தொடங்குவதற்கு முன்பு தமிழக அரசைக் கலந்து ஆலோசிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

NFTE TMTCLU சார்பில் குடந்தையில் நடைப்பெற்ற தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி  


Monday 5 October 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கான 

VDA - விலைவாசிப்படி உயர்வு 

             தினக்கூலி அடிப்படையில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA - VARIABLE  DEARNESS ALLOWANCE - விலைவாசிப்படி 01/10/2015 முதல் கீழ்க்கண்டவாறு உயரந்துள்ளது. இதற்கான உத்திரவை CLC முதன்மைத் தொழிலாளர் ஆணையம் 30/09/2015 அன்று டெல்லியில்  வெளியிட்டுள்ளது.

==============================================
பிரிவு                      A  நகரம்                             B  நகரம்           C   நகரம் 
==============================================
UNSKILLED                    353                             294                        236
WATCH AND WARD       390                            333                   276
WITHOUT ARMS  
WATCH AND WARD       430                            390                   333
WITH ARMS 
==============================================                    
நிரந்தர ஊழியர்களுக்கு 01/10/2015  முதல்
 IDA அதிகபட்சமாக 5.3 சதம் உயர்ந்துள்ளது. 
 ஆனால் அன்றாடக்கூலிகளாகப் பணி புரியும்
 தொழிலாளர்களுக்கு  மிகக் குறைந்த அளவே 
VDA கூடியுள்ளது.  
C பிரிவு நகரில் ஒரு நாள் கூலி 
ரூ.233/=ல் இருந்து ரூ.236/= ஆக ஒரு நாளைக்கு
ரூ.3/= மட்டுமே உயர்வடைந்துள்ளது. 

மேலும் ஒப்பந்த ஊழியர்கள் எந்தவிதமானப் பணி 
செய்தாலும் அனைவருக்கும் UNSKILLED சம்பளமே வழங்கப்படுகிறது. 
குறிப்பாக காவல் பணியிலும், கேபிள் தோண்டும் பணியிலும்  
ஒப்பந்த ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவர்களுக்கும் 
UNSKILLED சம்பளமே வழங்கப்படுகிறது. 
இது அடிமட்ட ஊழியர்களை ஏமாற்றும் செயலாகும்.

உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியர்கள் 
தங்கள் உரிமை பெறுவது எந்நாளோ?