தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Sunday 26 April 2015

ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி வழங்கல்


சிதம்பரம் மறைந்த ஒப்பந்த ஊழியர் தோழர்.R.பாலசுப்ரமணியன் அவர்களின் தாயார் பார்வதி அவர்களிடம் கடலூர் துணைப் பொதுமேலாளர் அவர்களின் அறையில் நடைபெற்ற நிகழ்வில் கடலூர் மாவட்ட அனைத்து சங்கங்களின் சார்பில் தோழர்கள், தோழியர்கள் நன்கொடையாக அளித்த தொகையும், சிதம்பரம் தோழர் G.பாண்டியன்.T.M அவர்கள் அளித்த தொகையும் சேர்த்து ரூ.3,50,000 /-க்கான வரைவோலையை ரூபாய் மூன்றரை லட்சம்) நிர்வாகத்தின் சார்பில் துணைப் பொதுமேலாளர் திருமதி.ஜெயந்தி அபர்ணா அவர்கள் அளித்தார். உடன் உதவிப் பொதுமேலாளர் (நிர்வாகம்) திரு.B.மகேஷ் அவர்கள் உடனிருந்தார். கடலூர் அனைத்து சங்கங்கள் சார்பாக நமது மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்டசெயலர் தோழர்,K.T.சம்பந்தம், BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை, P.செந்தில்குமரன்-SNEA,K.தனசேகர்-AIBSNLEA, சிதம்பரம் NFTE கிளைச்செயலாளர் தோழர்.V.கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம் தோழர்.G.பாண்டியன், G.பரமசிவம்,TMTCLU மாவட்டத் தலைவர் தோழர். M.S.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த திரு B.மகேஷ் அவர்களுக்கு அனைத்து சங்கங்களின் சார்பில் நன்றியினை உரித்தாக்குகின்றோம்

.

Friday 10 April 2015

காரைக்குடியின் ... உடும்பு பிடி !

விடாது... சிவப்பு...
ஒப்பந்த ஊழியர் போராட்டங்கள் 

காரைக்குடி மாவட்டத்தில் 
இன்று 10/04/2015 ஒப்பந்த ஊழியர்களுக்கு 
மார்ச் மாத சம்பளம் 
முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

சம்பளத்தில் ரூ.200/- அளவுக்கு 
அனைவருக்கும் குறைந்துள்ளது. 
ஒரு ஆளுக்கு 200 என்றால் 
198 ஊழியர்களுக்கு சுமார்  40000/= ரூபாய் ஆகும். 
இது என்ன கணக்கு என்பதை நிர்வாகம் தெளிவு படுத்த வேண்டும். 

புதிய குத்தகைக்காரர்கள் 
  • ஊழியர்களுக்கு சம்பள பட்டியல் PAY SLIP வழங்க வேண்டும்.
  • அடையாள அட்டை வழங்க வேண்டும்.
  • EPF கட்ட வேண்டும்... 
  • ESI அட்டை வழங்க வேண்டும்...
  • உரிய சம்பளம் வழங்க வேண்டும்...
  • குறித்த தேதியில் வழங்க வேண்டும்...
  • ஆண்டுக்கு ஒரு போனஸ் தர வேண்டும்...
  • மரணமுறும் ஊழியர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் உரிய நேரத்தில் தர வேண்டும்..
  • இல்லையென்றால் குத்தகை தொழிலை விட்டு ஓட வேண்டும்...
தோழர்களே...


11/04/2015 சிவகங்கை  
மாவட்ட செயற்குழுவில் 
விவாதிப்போம்...
கொதிக்கும் மேதினத்தில்..
உரிமைக்காய் கொதிப்போம்... 
போராட்டத்தில் குதிப்போம்...

கருப்புகளை...
கரை சேர்க்கும்வரை 
விடாது சிவப்பு...
இது ஒரு மெகா தொடர்...

Tuesday 7 April 2015

ஒப்பந்த ஊழியர் 
விலைவாசிப்படி VDA உயர்வு 

01/04/2015 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA 
விலைவாசிப்படி கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது. 

UNSKILLED  WORKERS

                              A பிரிவு நகரம்                   B பிரிவு நகரம்     C பிரிவு நகரம் 

புதிய கூலி              348                                        290                               233

பழைய கூலி          332                                        276                               222
                          ----------------------------------------------------------------------------------------------
ஒரு நாள் உயர்வு          16                                   14                               11

மாதந்திர உயர்வு         480                                420                                330

VDA உயர்வுக்குப்பின் 
மொத்த சம்பளம்                    10440                  8700                              6990

EPF பங்களிப்பு 12 %                1253                   1044                                839
                       -------------------------------------------------------------------------------------------------

நிகர மாத சம்பளம்                9187                     7656                              6151
                      --------------------------------------------------------------------------------------------------
                    
தோழர்கள் தங்கள் பகுதிகளில் VDA உயர்வை 
ஏப்ரல் 2015 முதல் அமுல்படுத்தவும்,  
மேலே குறிப்பிட்ட கூடுதல்  சம்பளம் 
வழங்கப்படுகின்றதா எனவும் கவனம் செலுத்த வேண்டும்.

Monday 6 April 2015

தொடரும்... 

தொடரும் வரை.. தொடரும்..
ஒவ்வொரு நாளும் போராட்டம்
ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் 


ஒப்பந்த ஊழியர்களுக்கு....
  • ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி கூலி வழங்கக்கோரி... 
  • மார்ச் மாதக் கூலியை உடனடியாக வழங்கக்கோரி.. 
  • குழி தோண்டி கேபிள் பழுது நீக்கும் தோழர்களின் நலனை தொடர்ந்து குழி மூடும் கொடுமை எதிர்த்து..
  • புதிய ஒப்பந்தகாரர்களும் EPF கட்டுவதில் டிமிக்கி கொடுக்கும் நிலையைக் கண்டித்து...
  • மரணமுற்ற காவலர் தோழர்.ஆரோக்கியசாமி குடும்பத்திற்கு சேரவேண்டிய காப்பீட்டுத்தொகை,குடும்ப ஓய்வூதியம் மற்றும் EPF பணம்  ஆகியவற்றை ஆண்டு ஓன்று ஆகியும் பட்டுவாடா செய்யாத மனித நேயமற்ற செயலைக் கண்டித்து..
கண்டன 
முழக்கப் போராட்டம் 

08/04/2015 - புதன்கிழமை நண்பகல்
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

தோழர்களே..
தொடர்ந்து போராடுவோம்...
தொழிலாளரை.. 
தொடர்ந்து ஏமாற்றும்.. 
தொல்லை  நிலை மாற்றுவோம்...

Thursday 2 April 2015

தீரர்களின் கோட்டமாம் ...கடலூரில் 
மாநில செயற்குழு 
2.4.2014
மாதம் தோறும்  7 ம் தேதி
 சம்பளம் உறுதியாக்கிட !
EPF முறைகேடு ஒழித்திட , ஒழுங்குபடுத்திட! 
மாநிலம் தழுவிய போராட்டம் 
மே மாதம் 
அறைகூவலிட்ட மாநில செயற்குழு காட்சிகள் சில ..