தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Thursday 19 March 2015

கிராம அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்: தனி நீதிபதி குழு அமைக்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

அஞ்சல்துறை இயக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் கிராமப்புறப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தனி நீதிபதி குழு அமைக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிராமப்புறங்களில் பணிபுரிந்து வரும் அஞ்சல்துறை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக அஞ்சல் விநியோகம் நடைபெறாததால் உரியவர்களுக்கு, உரியகாலத்தில் கடிதங்களும், அஞ்சல்களும் கிடைக்கப் பெறாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நடைபெறும் அஞ்சல்துறை ஊழியர்களின் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் கடிதப் போக்குவரத்துக்கு தனியார் துறைக்கு தள்ளிவிடப்படுகின்றனர். மத்திய அரசு ஊழியர் விரோதப்போக்கை உடனடியாக கைவிடவேண்டும். அஞ்சல்துறை இயக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் கிராமப்புறப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணவும் ஊதியம், வேலை தொடர்பாக பரிசீலிக்க தனி நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பதையும் ஏற்று போராட்டத்திற்கு தீர்வுகண்டு, கிராமப்புற அஞ்சல் பிரிவு மேம்பட்ட முறையில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment