தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday 30 December 2014

குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.15,000 வழங்க வேண்டும்: மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு,  குறைந்த பட்சம் ரூ.15,000 ஐ மாத ஊதியமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள  மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம், மாநில அரசின் தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குறைந்த பட்ச ஊதிய சட்டம் 1948ன் படி, நாட்டின் 45 வகை தொழில் நிறுவனங்களில் பணிபுரியும்  தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு விரும்புவதாகக் கூறப் படுகிறது.

இது தொடர்பாக பேசிய மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் செயலாளர் அருண்குமார் சின்ஹா, "இந்த குறைந்த பட்ச ஊதிய சட்டம், ஆலோசனை அளவில்  இருப்பதைவிட நடைமுறைப் படுத்த வேண்டிய சூழல் வந்துள்ளது. தேசிய அளவிலான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் இந்த ஊதிய விகிதத்தை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் "என்றார் - 


செய்தி : Vikatan EMagazine 

Monday 29 December 2014


தேனியில் டிசம்பர் 27,28 தேதிகளில் AITUC  மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள்.குருதாஸ் தாஸ்குப்தா, தா.பாண்டியன், இரா.நல்லக்கண்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

AITUC சார்பாக தர்மபுரி தோழர்.மணி, NFTE  சார்பாக தோழர்கள் SS.கோபாலகிருஷ்ணன்,காமராஜ், TMTCLU  சார்பாக தோழர் .செல்வம் ஆகியோர் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். நமது இயக்க வழிகாட்டி தோழர்.சேது தலைமையில் மதுரை தோழர்கள். இலட்சம்,முருகேசன் ,காரைக்குடி தோழர்கள்.சேக்காதர் பாட்சா,லால் பகதூர்,தமிழ்மாறன்,
மாரி ஆகியோர் வரவேற்புக்குழுவில் பணியாற்றினர். 

தோழர்.TM.மூர்த்தி  தமிழ் மாநில AITUC 
பொதுச்செயலராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 அவரது பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.

-தோழர் மாரி -காரைக்குடி 

Sunday 28 December 2014

5 நாள் சம்பளத்தை பிடித்ததால் முன் கூட்டியே ஸ்டிரைக்: தொழிற்சங்கத்தினர் தகவல்


போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நாளை (29–ந்தேதி) முதல் ஸ்டிரைக் செய்வதாக அறிவித்திருந்தாலும் இன்றே ஸ்டிரைக்கை தொடங்கி விட்டனர். இதுபற்றி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:–
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஸ்டிரைக் சம்பந்தமாக முடிவெடுக்க கடந்த 2–ந்தேதி திருச்சி மாநாட்டுக்கு சென்றிருந்தோம். இதற்காக எங்களது சம்பளத்தை பிடித்தம் செய்து விட்டனர்.
இதேபோல் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் அனைத்து பஸ்டெப்போக்களிலும் கோரிக்கை மனு கொடுக்க சென்றிருந்தோம். இதில் ஈடுபட்ட தொழிலாளர்களின் சம்பளமும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டுக்கு சென்றதற்காகவும் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் டிரைவர்– கண்டக்டர்களுக்கு குறைந்தது 5 முதல் 8 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. வாங்குகிற சம்பளத்தில் 5 ஆயிரம் போய் விட்டால் என்ன செய்வது? அதனால் தான் சம்பள பிடித்தத்தை கண்டித்து இன்று போராட்டத்தில் குதித்துள்ளோம்.
தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்காமல், போராட்டம் நடத்தும் அளவுக்கு பிரச்சினையை கொண்டு சென்றது போக்குவரத்து நிர்வாகம் தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday 27 December 2014

AITUC மாநில மாநாடு-தேனி


தேனியில்  நடைபெற்றுவரும்  AITUC மாநில மாநாட்டில் மாநில செயலர் தோழர் பட்டாபி , மத்திய சங்க பொறுப்பாளர் தோழர் .கோபாலகிருஷ்ணன் ,மத்திய சங்க சிறப்பிப்பாளர்  தோழர் .காமராஜ் ,TMTCLUTN  மாநில செயலர் தோழர் .செல்வம் ,  காரைக்குடி மாரி  ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர் . 

Tuesday 16 December 2014

 இரண்டு மாதமாய் ஒப்பந்த தொழிலாளிக்கு சம்பளம் வழங்கப்படாததை கண்டித்தும் !
 புதிய குளறுபடி டெண்டர் முறையை   
 முறைபடுத்த வலியுறுத்தியும் !
கடலூரில் நடைபெற்ற  
16.12.2014
பெருந்திரள்
 தர்ணா போராட்டம் .






Wednesday 10 December 2014

டிச 11 - மகாகவி பாரதி பிறந்தநாள்


PROTEST DAY DECEMBER 11

மத்திய அரசே... BSNL நிர்வாகமே...

  • காலியாக உள்ள இயக்குனர் காலியிடங்களை நிரப்பு... 
  • கோபுர பராமரிப்புக்காக துணை நிறுவனம் ஏற்படுத்தாதே...
  • கிராமப்புறங்களில் சேவை வழங்குவதற்கான சன்மானம் வழங்கு... 
  • BSNL வளர்ச்சிக்கான உரிய உபகரணங்கள் வழங்கு...
  • அனைத்து சொத்துக்களையும் BSNLக்கு மாற்று...
  • BSNL - MTNL இணைப்பை நிறுத்து...
  • SPECTRUM அலைவரிசைக் கட்டணத்தை திருப்பி வழங்கு... 
  • ஓய்வூதிய பங்களிப்பை PENSION CONTRIBUTION  ஒழுங்குபடுத்து...
  • அலைவரிசை ஒதுக்கீட்டை  BSNLக்கு கட்டணமின்றி வழங்கு...
  • அலைவரிசை விவாகாரத்தில் தனியாருக்கு துணை போகும் TRAI  முடிவை ரத்து செய்...
  • ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரையை தூக்கி ஏறி...
  • BSNL வளர்ச்சிக்கு உரிய நிதி ஆதாரம் வழங்கு...
  • BBNL  நிறுவனத்தை BSNL உடன் இணை...
  • 4G தொழில் நுட்பம் வழங்கும் வசதியை BSNLக்கு கட்டணமின்றி வழங்கு...
  • அலைவரிசை வசதி திருப்பி ஒப்படைக்கப்பட்ட பகுதிகளுக்கான கட்டணத்தை உடனே  வழங்கு...
  • ஓய்வூதியர்களுக்கு 78.2 IDA இணைப்பை உடனே அமுல்படுத்து...
  • ஊதிய மாற்றம் ஏற்படும்போது ஓய்வூதிய மாற்றமும் ஏற்படுத்திட உத்திரவிடு...
  • புதிய ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் பணியில் அமர்த்து...
  • மத்திய,மாநில,பொதுத்துறை அரசு நிறுவனங்களில் BSNL சேவையைக் கட்டாயமாக்கு...
  • ITI நிறுவனம் மூலம் உபகரணங்கள் வாங்குவதை  கட்டாயமாக்காதே...
ஓன்று படுவோம்... போராடுவோம்... வெற்றி பெறுவோம்...

Monday 8 December 2014

புத்தகம் சுவாசிப்போம் !


நூற்றாண்டு நிறைவு நேரத்தில் வாசிப்போம் ....




புத்தக தேவைக்கு : 044 - 28454869


Thursday 4 December 2014

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் 


இணைந்த 

நாடு தழுவிய  எதிர்ப்பு நாள் 




கோரிக்கைகள்:- 
மத்திய அரசே...
  • தொழிலாளர் நலனுக்கு எதிராக  தொழிலாளர்  சட்டங்களைத் திருத்தும் போக்கை கைவிடு...
  • தொழிலாளர் பிரச்சினைகளில் தொழிற்சங்கங்களை ஆலோசனை செய்...
  • நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்து...
  • பதிவு செய்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்க பதிவு எண் வழங்கு...
  • நிரந்தர ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கு..
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.15000/= வழங்கு...
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.26000/= வழங்கு...
  • பாதுகாப்பு, இரயில்வே,ஆயுள் காப்பீடு மற்றும் ஏனைய பொதுத்துறைகளில் அந்நிய வெளிநாட்டு மூலதனங்களை அனுமதிக்காதே...
  • வங்கி ஊழியர்களுக்கு சம்பள திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை அமுல்படுத்து..
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 50 சத விலைவாசிப்படியை இணைத்து வழங்கு..
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்வு இல்லாமல், தேர்வுக்குழு இல்லாமல் நான்கிற்கு மேற்பட்ட  பதவி உயர்வு வழங்கு.
  • போனஸ் உச்சவரம்பை உயர்த்து..
  • போனஸ் பெறுவதற்கான தகுதி வரம்பை உயர்த்து..
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய த்தை உயர்த்து...
  • ஓய்வூதியர்களுக்கு உரிய மருத்துவப்படி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான சலுகைகளை வழங்கு...
  • புதிய ஓய்வூதிய விதிகளை தொழிலாளர்களுக்கு நலன் தரும் வகையில் திருத்தி அமை..

தோழர்களே....
மத்திய அரசைப்போல்... 
அந்நியனிடம் குனிந்து நில்லோம்....
நாம்... 
இணைந்து நிற்போம்...
அநியாயத்தின் முன் 
அணி அணியாய்..
நிமிர்ந்து நிற்போம்....
கரம் உயர்த்துவோம்....
தேசத்தின் சிரம் நிமிர்த்துவோம்...