தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Tuesday 30 December 2014

குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.15,000 வழங்க வேண்டும்: மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு,  குறைந்த பட்சம் ரூ.15,000 ஐ மாத ஊதியமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள  மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம், மாநில அரசின் தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குறைந்த பட்ச ஊதிய சட்டம் 1948ன் படி, நாட்டின் 45 வகை தொழில் நிறுவனங்களில் பணிபுரியும்  தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு விரும்புவதாகக் கூறப் படுகிறது.

இது தொடர்பாக பேசிய மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் செயலாளர் அருண்குமார் சின்ஹா, "இந்த குறைந்த பட்ச ஊதிய சட்டம், ஆலோசனை அளவில்  இருப்பதைவிட நடைமுறைப் படுத்த வேண்டிய சூழல் வந்துள்ளது. தேசிய அளவிலான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் இந்த ஊதிய விகிதத்தை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் "என்றார் - 


செய்தி : Vikatan EMagazine 

No comments:

Post a Comment