தங்கள் மாவட்ட TMTCLU ஒப்பந்த ஊழியர் நிகழ்வுகள் - புகைப்படங்கள் மற்றும் கருத்துகள் தெரிவிக்க : nftekmb2@gmail.com

Sunday, 13 August 2017

TMTCLU
மூன்றாவது கிளை மாநாடு, விழுப்புரம்

13.8.2017 காலை விழுப்புரம் தொலைபேசி நிலைய வாயிலில் புதியதாக அமைக்கப்பட்டிருந்த சங்கக் கொடிக்கம்பத்தில் கொடி யேற்றத்துடன் துவங்கியது. மாநில உதவிசெயலர் தோழர் AS.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்டத் தலைவர் தோழர் MS.குமார் கொடியேற்றிட, மாவட்ட செயலர் தோழர் G.ரங்கராஜு விண்ணதிரும் கோஷமிட்டார். NFTE மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் உரையாற்றினார்.
பின்னர் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள மாவட்ட AITUC அலுவலகத்தில் மாநாடு துவங்கியது. தோழர் AS.சுப்பிரமணியன் தலைமையில் தோழர் S.நடராஜன் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.  தோழர் S.சண்முகம் அஞ்சலி உரையாற்றினார்.

TMTCLU மாநிலப் பொருளாளரும், குடந்தை NFTE மாவட்ட செயலருமான தோழர் விஜய்ஆரோக்கியராஜ் துவக்க உரையாற்றினார்.  முழு உரை பின்னர்)
Saturday, 29 July 2017

சமவேலை...சம ஊதியம் ...பேரணி ...சென்னைசென்னை கொளுத்தும் வெயிலுக்கு ...
இணையாக கோபத்தோடு திரண்ட இளைஞர்கள் கூட்டம் ...
குடந்தை மாவட்டத்திலிருந்து 75 பேர் பங்கேற்ற ...
பெருந்திரள் பேரணி ...


மாநிலம் முழுவதும் TMTCLU சார்பில்  500 தோழர்கள் ...
மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பின் சார்பில் 25000...பங்கேற்க ..
சமவேலை...சம ஊதியம் ...பேரணியை ...
தோழர் நல்லகண்ணு துவக்கிவைத்தார் ...

சென்னை சாலைகளில் ..
இரண்டு .... " டி" அரசுகளை கண்டித்து ...
மோ "டி" மற்றும் எடப்பா "டி"
அரசுகளை கண்டித்து முழக்கம் ...
வாகனங்களுக்கு பதில் சாலைகளை நிரப்பியது ...

நிறைவில் ...
தோழர்கள் மூர்த்தி ..சுப்பராயன் ...முத்தரசன் ..
தோழியர் வஹிதா கண்டன உரையாற்ற ...
தோழர் தா .பா நிறைவுப்பேருரை தந்தார் ...

மாநிலம் முழுவதும் ... TMTCLU  தோழர்கள் ...
கடும் பொருள் செலவு பாராது ..
NFTE  TMTCLU  மீதான நம்பிக்கை சுமந்து ...குவிந்தனர் ..
நம்பிக்கை ..வீண்போகாது ..எனும் நம்பிக்கையில் ...
ஜிந்தாபாத் ...